இலங்கைக்கு நேரம், சுதந்திரம் தேவை – பீரிஸ்
இலங்கை மீது மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் ‘அளவுக்கு அதிகமான அழுத்தம்’ ஒருபோதும் ஆக்கபூர்வமாக அமையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க அணியினர் நேற்று மாலை இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க தூதுக்குழுவினரை சந்தித்தனர்.
இவர்கள் பிரதானமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பான விடயங்களை பேசினர்.
இந்த கூட்டத்தின் பின், பேசிய அமைச்சர் பீரிஸ், தீர்மானத்தின் மேல் தீர்மானம் கொண்டுவருதல், இலங்கையின் நிலைமையை கையாளும் முறையானது என்றார்.
சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கைக்கு நேரம், சுதந்திரம் என்பன தேவையென கூறிய அவர் எல்லாவற்றையும் விட நாட்டின் கௌரவம் முக்கியமானது என்றார்.
அவர்இ நிலக்கண்ணிவெடி அகற்றல்இ வடக்கில் பொருளாதாரத்தின் மீட்சி போன்ற விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் பற்றி தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.
இலங்கை மீது தீர்மானம் இயற்ற அமெரிக்கா முயல்வது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், ‘நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் இலங்கை கண்டுள்ள சாதனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளப்போகின்றது’ என்றார்.
இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விடயங்களையும் அமெரிக்கா வலியுறுத்தும் எனவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply