இலங்கையில் ஆயிரம் கைதிகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை

ஆயிரம் கைதிகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் 65ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது. கைதாகி தடுத்து வைக்கப்பட்டவர்களில் பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம், சுங்க மோசடி, பயங்கரவாத தடைச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 27 குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.அத்துடன் இரண்டாண்டு கால சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலம் இரண்டு வாரங்களிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலம் மூன்று வாரங்களினாலும் குறைக்கப்பட உள்ளது.

குற்றச்செயல்களை செய்தவர்கள் அபராதப் பணத்தைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிகளவில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 33 சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் டபிள்யு. கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply