இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்க ஐ.தே.க தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்க, அந்த கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த இரண்டாம் நிலை தலைவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் போது, அதனை அவர்கள் சிறப்பாக செய்து முடிப்பார்களானால் அவர்களுக்கு கட்சியின் தலைவராக முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.இந்த இரண்டாம் நிலை தலைவர்கள் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்மன் கிரியல்ல, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்துமபண்டார, மங்கள சமரவீர, பீ.ஹெரிசன், ரவி கருணாநாயக உள்ளிட்ட பல உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply