சிரியாவில் மனித உரிமை மீறல்: ஐநா கருத்து
சிரியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதல்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த எண்ணிக்கை 40 லட்சம் ஆக உயர வாய்ப்பு இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 70 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஐ.நா. அவை தற்போது உதவி செய்து வருவதாகவும், மேலும் பல தொண்டு நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே சிரியாவின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply