ஓடும் ரயிலில் ஏற முற்பட்டவர் கால் இடறி விழுந்து மரணம்

மருதானை ரயில் நிலையத்தில் அவசரமாக ஓடும் ரயிலில் ஏறமுற்பட்ட இளைஞர் ஒருவர் தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கிப் புறப்பட்ட றுகுணு குமாரி ரயிலில் ஏற முற்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபீல் அஹமட் என்ப வரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவ சரமாக ஏறமுற்பட்டபோதே கால் இடறி ரயிலுக்கும் பயணிகள்மேடைக்கும் இடையே கீழே வீழ்ந்ததால் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மருதானை தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்று வரும் மாணவராவார். இவருடைய சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply