வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது: பான் கி மூன்

வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி- மூன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது. மாறாக, மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் தன் நாட்டு மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய ஐ.நா. முயற்சி செய்கிறது. ஆனால், அந்நாட்டின் அணு ஆயுதச் சோதனை அறிவிப்பு காரணமாக, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டுவதால், நிதிப்பங்களிப்பு குறைவாக உள்ளது. எனவே, ஐ.நா. அவசரகால நிவாரண நிதியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்கள் ஆகியவற்றைப் பின்பற்றி வடகொரியா தனது மக்களுக்கு மேலும் பல நன்மைகளைச் செய்ய வேண்டும்.

வடகொரியா அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டால், தென் கொரியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்த மேலும் பல ஆண்டுகள் தாமதமாகும் என்றார் பான் கி- மூன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply