மருத்துவமனையில் இருந்து மலாலா வீடு திரும்பினார்
பாகிஸ்தானில், பெண் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் என்ற 15 வயது மாணவி, கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி பள்ளியில் இருந்து வந்தபோது தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், இங்கிலாந்தின் பர்மிங்காம் ராணி எலிசபெத் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.சுமார் 4 மாத சிகிச்சைக்குப் பிறகு மலாலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த வார இறுதியில் அவருக்கு தலை மறுசீரமைப்பு ஆபரேசன் செய்யப்பட்டது. ஆபரேசனுக்குப் பிறகு மலாலா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மலாலா பர்மிங்காமில் அவரது குடும்பத்தினர் தற்காலிகமாக தங்கியிருக்கும் வீட்டில் தொடர்ந்து வசிப்பார். அங்கிருந்து அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று செல்வார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply