சிரியா ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகே ‘பஸ் குண்டு’ வெடித்ததில் 54 பேர் பலி

சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை எதிர்த்து புரட்சிப் படையினர் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.இந்நிலையில், சிரியா ராணுவத்தின் சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள், அந்த தொழிற்சாலையின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த போது வெடிப்பொருட்களை ஏற்றி வந்த பஸ்சை புரட்சியாளர்கள் வெடிக்க வைத்தனர்.இச்சம்பவத்தில் 11 பெண்கள் உள்பட 54 பேர் உடல் சிதறி பலியாகினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply