இலங்கை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
இந்தியாவில் உள்ள இலங்கை அலுவலகங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசை இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் உள்ள தனது தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்தோர், இலங்கை ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் பெüத்த ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இலங்கை வங்கி மீது வியாழக்கிழமை நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை இலங்கை விடுத்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபட்சவின் வருகையைக் கண்டித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply