விமான நிலையத்தை கைப்பற்ற கடும் சண்டை: சிரியாவில் 150 பேர் பலி

சிரியாவில் உள்ள முக்கிய விமான நிலையத்தைக் கைப்பற்ற நடைபெற்ற கடும் சண்டையில் 150 பேர் உயிரிழந்தனர்.சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக புரட்சிப் படையினர் போராடி வருகிறார்கள். நாட்டின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நிலவி வருகிறது.இந்நிலையில் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ மாவட்டத்தில் உள்ள முக்கிய விமான நிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த புதன்கிழமை முதல் புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். அவர்களுக்கு எதிராக அரசுப் படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிகளால் சுட்டும் குண்டுகளை வீசியும் நடைபெற்ற இந்த கடும் சண்டையில் இரு தரப்பிலும் சேர்த்து 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளை புரட்சிப் படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply