யாழ். உண்ணாவிரதத்தில் குழப்பம் விளைவித்தவர்களை வெளிப்படுத்த வேண்டும் : அத்தநாயக்க
யாழ். தெல்லிப்பளையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் யார் என்பதை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்த நபர்களுக்குத் தண்டனை வழங்கப்படாது விட்டால், வடக்கில் சிவில் நிர்வாகம் இடம்பெறவில்லை என்று ஊர்ஜிதமாகிவிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply