நல்லாட்சிக்கு உறுதுணை புரிய வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் இனவாதத்துக்கு இரையாகிறார்:கோதாபய ராஜபக்ஷ

அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு உறுதுணைபுரியக் கூடிய வகையில் அரச நிர்வாகத்தில் உள்ள குற்றங் குறைகளை சுட்டிக் காட்டி அவற்றை திருத்தியமைக்கும் பெரும் பொறு ப்பைக் கொண்டுள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க. ஆனால், யாழ். குடாநாட்டுக்குச் சென்று யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீளெழுந்துள்ள தமிழ்பேசும் மக்களிடையே இனவாதத்திற்கு தூபமிடும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழுவொ ன்றுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பலாலியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு எதிராக கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் மக்களை தூண்டிவிடுகிறார் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

தெல்லிப்பளையில் துர்க்கை அம்மன் கோயிலுக்கு முன்னால் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தை அப்பிரதேசத்தின் பாதுகாப்பை பலவீனப்படுத்தாத வகையில் ரத்து செய்துவிடலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

இவ்வரசாங்கம் வடபகுதியில் உள்ள தனியார் காணிகளை மட்டுமன்றி கொழும்பிலும் அதன் சுற்றுபுறங்களிலுமுள்ள தனியார் காணிகளையும் சுவீகரித்து வருகின்றது என அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் கேந்திர நிலைகளில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை அரசாங்கம் வாபஸ் பெற மாட்டாது என அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரோ, தமிழ் கூட்டணியின் தலைவர்களோ எத்தகைய பிரசாரங்களை அரசாங்கத்திற்கு எதிராக செய்தாலும் தமிழ் பேசும் மக்கள் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply