நாட்டில் மதஸ்தலங்களை அமைக்க புதிய கட்டுப்பாடு : நிமல்
நாட்டில் மத வணக்கஸ்தலங்கள் எங்கெங்கு அமைக்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் அரசாங்கம் புதிதாக சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் அதற்கமையவே அனைத்து மதஸ்தலங்களும் அமைக்கப்பட வேண்டுமென சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.இனவாத, மதவாதத்தை நாட்டில் தூண்டிவிட்டு அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள் தள்ளிவிட சில தீய சக்திகள் நடவடிக்கைகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வெளியிட்ட விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply