எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் ; ஐ.தே.க குற்றச்சாட்டு

எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்ட நிலையில்இ ஐக்கிய தேசிய கட்சி இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அரசாங்கத்தின் அநாவசிய செலவூகள் மற்றும் திறனற்ற நிர்வாகத்தின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமது நிர்வாக திறனின்மை காரணமாகஇ இவ்வாறு பாரிய செலவினங்களை ஏற்படுத்தி இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியூள்ளார்.இதே குற்றச்சாட்டை ஜே வி பியூம் இன்று முன்வைத்துள்ளது.
ஜே வி பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் இது தொடHபில் கருத்து வெளியிடும் போது அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிறிதும் சிந்திக்காமல் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மின்சார கட்டணங்களும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply