மாகாண சபைத் தேர்தல் ஐ.தே.க. வுக்கு எதிராக மாற்றுக்குழு களத்தில்
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாற்றுக்குழுவொன்றை தேர்தலில் போட்டியிடவைப்பதற்கான ஆயத்தங்களை செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவையும், கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் வேலைத் திட்டத்துக்கு எதிராகவும் தாம் இந்த மாற்றுக் குழுவொன்றை களத்தில் இறக்கவுள்ளதாகவும், கட்சிக்குள் இருக்கும் பெரும்பான்மை யானவர்கள் இந்த வேலைத் திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப் பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அணை (ஜாதிக பவுர) என்ற பெயரில் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த ரங்க பண்டார, ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கட்சிகள் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இது தொடர்பாக மக்களுக்கு விரைவில் தெளிவூட்டவி ருப்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இந்த மாற்றுக்குழு அமையும் எனத் தெரிவிக்கப்ப டுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply