இலங்கை பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரதமரிடம் வாசன் கோரிக்கை

மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.  அப்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வாசன் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை பரிசீலனை செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply