தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி நாளை (05) முதல் விசேட ரயில், பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து அமைச்சுகள் தெரிவித்தன. நாளை முதல் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடு படுத்தப்பட உள்ள தோடு விசேட பஸ் சேவைகள் திங்கட்கிழமை (08) முதல் நடத்தப்படுமென அறிவிக்கப்படுகிறது.
5ம் திகதி முதல் 20 ம் திகதி வரை நகர மற்றும் கடுகதி ரயில் சேவைகள் இடம்பெறும். மேலதிக பஸ் சேவைகள் 8 முதல் 16ம் திகதி வரை இடம்பெற உள்ளதோடு பண்டிகையின் பின்னர் கடமைக்குத் திரும்புவதற்காக 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை மாகாண போக்குவரத்து அதிகார சபைகளின் பங்களிப்புடன் விசேட சேவைகள் நடத்தப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு கூறியது.
சாதாரண நேர அட்டவணைக்கு மேலதிகமாக இந்த பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதோடு பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் பயணிகளிடம் மேலதிக கட்டணம் அறவிடல், டிக்கட் வழங்காமை பயணிகளை முறையாக கவனிக்காமை என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என அதிகார சபை கூறியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply