தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய ஒப்பந்தம் கைச்சாத்து

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்தம் இன்று மாலை 6 மணியளவில் கைச்சாத்திடப்படவுள்ளது.  ராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.  முதலாளிமார் சம்மேளனத்துடன் இன்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மலையக தோட்டத் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி என்பன பேச்சுவார்த்தை நடாத்தின.

இப்பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளம் 450 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையிலும் பார்க்க 70 ரூபா அடிப்படை நாள் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுதவிர விலைபங்கு கொடுப்பனவாக 30 ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இதன்படி மாதம் 75% வரவை பதிவு செய்யும் தோட்டத் தொழிலாளி ஒருவர் நாள் சம்பளமாக 620 ரூபாவை பெறுவார் என தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வேலாயுதம்  தெரிவித்தார்.

கடந்த முறையை விட 105 ரூபாவில் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply