மாத்தளையில் காணாமல் போனோர் பற்றிய தகவல் சேகரிப்பில் ஜே.வி.பி
மாத்தளையில் 1988-90ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை திரட்ட உள்ளதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. விசேட கமிட்டி ஒன்றை நிறுவி அதன் மூலம் குறித்த தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜே.வி.பி. மாகாணசபை உறுப்பினர் கமகெதர திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கமிட்டி இவ்வாறு தகவல்களை திரட்டவுள்ளது.
வீட்டுக்கு வீடு சென்று காணாமல் போனோர் பற்றிய தகவல்களை திரட்ட உள்ளதாக ஜே.வி.பி. பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாத்தளை வைத்தியசாலை பகுதியில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதாகவும், அவை ஜே.வி.பி உறுப்பினர்களின் உடல் எச்சங்கள் என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தகவல் திரட்டப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் அரசாங்கம் விசாரணை நடத்தினால் இந்தத் திரட்டப்படும் தகவல்கள் விசாரணைகளுக்காக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply