அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 35 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 35 பேர் கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (04) அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற அவர்கள், காலி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 11 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மஹபாகே, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, பேருவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply