இலங்கையில் ஒற்றுமை நிலவ வாய்ப்பு – பிரணாப்
போர் முடிவுக்கு வந்ததால் இலங்கையில் ஒற்றுமை நிலவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப்பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் கூறியதாவது:
இந்தியா-இலங்கை இடையே பல்லாண்டு காலமாக கலாசார, வரலாற்று அடிப்படையில் நெருங்கிய உறவு உள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நெருங்கிய நட்புறவின் அடிப்படையில் இலங்கையில் நடைபெறும் சம்பவங்களில் இந்தியாவுக்கும் அக்கறை உண்டு.
போர் முடிவுற்றதால் அரசியல் தீர்வு காண இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் தீர்வு காண வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply