சேது சமுத்திரத் திட்டம் இலங்கைக்கு ஆபத்து
சேது சமுத்திரத் திட்டமானது இலங்கை கடல் வளங்களுக்கு ஆபத்தாக அமையக் கூடுமென இலங்கை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடல் ஆய்வாளர்கள், சுழலியலாளர்கள், பூகோளவியலாளர்கள் மற்றும் கடல்வளப் பொறியியலாளர்கள் கூட்டாக இணைந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். சேது சமுத்திரத் திட்டத்தினால் இலங்கையின் கடல் வளங்களுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.இந்தியா சகல விதமான சர்வதேச கடல்வளப் பாதுகாப்பு சட்டங்களையும் உதாசீனம் செய்து, சேது சமத்திரத் திட்டத்தை முன்னெடுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினர், சேது சமுத்திரத் திட்டத்தின் நன்மை தீமைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.சேதுசமுத்திரத் திட்டமானது இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைப்பரப்பில் அமைந்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பில் இந்திய அரசாங்கம் இலங்கைக் கடல் வளங்கள் பற்றி கவனம் செலுத்தாமை வருத்தமளிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
.
சர்வதேச கடல் வளப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு புறம்பாக இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தினால் இலங்கை கடல் வளங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்த சரியான மதிப்பீடுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply