நேட்டோ படையின் தவறுதலான தாக்குதலில் ஆறுபேர் பலி

ஆப்கானிஸ்தானின் காசினி மாகாண தேயாக் என்னுமிடத்தில் காரில் வந்த இரு சகோதரர்களை வழிமறித்து பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, அப்பகுதியின் அருகில் தலிபான்களுடன் சண்டையிட்ட நேட்டோ விமானப்படையினர் தவறுதலாக இந்த சோதனையில் ஈடுபட்டவர்களை தலிபான்கள் என நினைத்து அவர்களை நோக்கி குண்டுகளை வீசினர்.

இதில் 4 பொலிசார் உள்பட காரில் வந்த இரு சகோதரர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் தவறுதலாக நடந்தேறியுள்ளது என்பதை நேட்டோ படையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply