மேல் மாகாண சபைக்கு முன் உண்ணாவிரதம் – அஞ்சன பிரியங்ஜித்
எவ்வித முன்னறிவித்தலும் இன்றி தனியார் பஸ் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறித்த கட்டண உயர்வு எதிர்வரும் 8ம் திகதிக்கு முன் வாபஸ் பெறப்படாவிட்டால் மேல் மாகாண சபைக்கு முன் உண்ணாவிரதம் நடாத்தப்படும் என சம்மேளனத்தில் பிரதான செயலாளர் அஞ்சன பிரியங்ஜித் எச்சரித்துள்ளார்.
மேல் மாகாண தனியார் பஸ்களுக்கான பதிவுக் கட்டணம் 750 ரூபாவில் இருந்து 1000 ரூபாவிற்கும் வீதி அனுமதிப் பத்திர கட்டணம் 3500 ரூபாவில் இருந்து 5000 வரைக்கும் வீதி திருத்த பத்திரத்திற்கு 70 000 ரூபாவில் இருந்து 10.0000 ரூபாவும் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
7 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பு தருவதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் கூறியபோது 10 சதவீத கட்டண உயர்வு வேண்டும் என கெமுனு விஜேரத்ன கேட்டது மேற்சொன்ன விடயங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டா என அஞ்சன பிரியங்ஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply