இலங்கையில் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
சுமார் ஒரு வருட காலத்திற்குப் பின்னர் இலங்கையில் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு சமமாக இலங்கையின் ரூபா பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று (04) 1.6% அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ள இலங்கை பணியாளர்கள் புதுவருடத்திற்கு தங்கள் வீடுகளுக்கு பணம் அனுப்பியமை மற்றும் ஏற்றுமதி வறுமானம் என்பன ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு காரணமாகும்.
கடந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி 10.7% குறைந்திருந்தது.
இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கை பெறுமதி 125.9784 ரூபாவாக காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply