அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது – ஐ.தே.க.
நாட்டில் 30 வருடகால புலிப் பயங்கரவாதம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைவதற்குள் அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதென பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்து நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதாக கூறப்படுகின்ற நிலையில் அரச பயங்கரவாதமே தலைவிரித்தாடுகின்றது. இதனை அண்மைக் காலங்களில் இடம்பெற்ற குறிப்பாக கிளிநொச்சியில் தமிழ்க் கூட்டமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இதேவேளை, உதயன் பத்திரிகை மீது 32 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு மீதான தாக்குதல் சம்பவத்தில் 2 பேரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போது அவர்கள் இருவரும் பொலிஸார் என விசாரணை நடத்திய பொலிஸாரே தெரிவிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply