இந்திய மீனவர்களுக்கு 11ஆம் திகதி விடுதலை

இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்தபோது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 19 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யவுள்ளதாக  இலங்கை வாக்குறுதியளித்துள்ளது என கால்நடைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த 19 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 11ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் சி.என்.என். – ஐ.பி.என். இற்கு அவர் கூறியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 53 இந்திய மீனவர்களில் 34 பேரை கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை விடுதலை செய்திருந்தது.

இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரை அழைத்து இந்தியா தனது எதிர்ப்பை  தெரிவித்ததை அடுத்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

‘இவர்களின் வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்றையதினம் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்’ எனவும் ஆறுமுகம் தொண்டமான் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply