புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம்
‘தமிழ் தேசிய முன்னணி’ என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இந்தக் கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது கட்சியின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் தலைவராக சரவணபவானந்தம் துஸ்யந்தன், பொதுச் செயலாளராக பரமு செந்தில்நாதன், பொருளாளராக தர்மலிங்கம் சிறிதரன், கொள்கைப் பரப்பு செயலாளரும் ஊடகப் பேச்சாளருமாக நடராசா ஜனாதீபன் (ஜனகன்), தேசிய அமைப்பாளராக பரராசசிங்கம் ரோன் கனிசியஸ், இளைஞர் அணி செயலாளராக விநாயகமூர்த்தி சசிதரன், உபதலைவராக வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன், துணை பொதுச் செயலாளராக கணபதிப்பிள்ளை கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply