அமுக்க வெடியில் சிக்கி முகமாலையில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம், முகமாலை, முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடி மற்றும் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் அமுக்கவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று இன்று (08) காலை 10 மணியளவில் தமது பணியை மேற்கொண்டிருந்தவேளை பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக அவ்விடத்திற்கு ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் சக பணியாளர்கள் விரைந்தபோது குறித்த பணியாளர் வெடி ஒன்றில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.
அமுக்க வெடியில் சிக்கி கிளிநொச்சியைச் சேர்ந்த கே. முருகவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் சக பணியாளர்களிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply