தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக முஸ்லிம் மக்கள் இன்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் மாவட்ட செயலகரிடம் கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply