இந்திய பாராளுமன்றக் குழு – பீரிஸ் இன்று சந்திப்பு
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (09) வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸை சந்திக்கவுள்ளது. இந்திய குழுவினர் நேற்று (08) இரவு இலங்கையை வந்தடைந்ததாக விமானநிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வர்த்தக மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இவர்களது பயணம் அமைந்துள்ளது.
இவர்கள் இன்று (09) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை (10) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இக்குழுவினர் இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.
இதேவேளை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
எனினும் இலங்கைக்கான இந்த விஜயத்தை ரத்து செய்யுமாறு தமிழக தலைவர்கள் பலரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply