இலங்கையில் தமிழ் நாட்டு சினிமா தடை செய்யப்பட வேண்டும்

தமிழ் நாட்டு திரைப்படங்கள் இலங்கையில் திரையிடுவது தடைசெய்யப்பட வேண்டும் எனவும் அவ்வாறில்லையாயின் அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராவண சக்தி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழ் நாட்டு திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவது தடை செய்யப்பட வேண்டும் என ராவண சக்தி அமைப்பு இன்று (09) இலங்கை தணிக்கைச் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராவண சக்தி அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று (09) இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகரவை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

எனினும் இதன்போது காமினி சுமனசேகர, இவ்விடயம் அரசமட்ட வேலை எனவும் இது குறித்து தனக்கு தீர்மானம் எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அவ்வாறாயின் இலங்கை திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு தாம் அறிவுறுத்தல் வழங்குவதாக ராவண சக்தி அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனை அவர்கள் பொருட்படுத்த தவறின் அதற்கு எதிரான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply