வடகொரியாவின் 4-வது அணுகுண்டு சோதனை

வடகொரியா 4-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த பெப்ரவரி 12-ம் திகதி வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது.  அதை தொடர்ந்து ஐ.நா. மற்றும் அமெரிக்கா வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தது. இதனால் வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது போர் பிரகடனம் செய்தது.  

இதையடுத்து தென்கொரியா மற்றும் அமெரிக்க இராணுவங்கள் இணைந்து போர் பயிற்சி மேற்கொண்டதால் அப்பகுதியில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதை தடுக்க சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில்தான், வடகொரியா 4-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே, வடகொரியா நடத்த இருக்கும் 4-வது அணுகுண்டு சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க செய்தி தொடர்பாளர் பாட்ரிக் வென்ட் ரெல் நிருபர்களிடம் கூறியதாவது…

எந்தவிதமான அணுகுண்டு சோதனையோ அல்லது ஏவுகணை சோதனையோ நடத்தக்கூடாது என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால், இதுபோன்ற சோதனைகள் நடத்துவதன் மூலம் இது ஐ.நா. தீர்மானத்தை நேரடியாக மீறுவதாக உள்ளது. இந்த நடவடிக்கையை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply