முஸ்லிம் மக்கள் மீதான துன்புறுத்தலை அனுமதிக்க கூடாது – அமெரிக்கா

இலங்கையில் முஸ்லிம் மக்கள் துன்புறுத்தப்படும் செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது என அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  சிங்கள பௌத்த தேசியவாதக் குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட செயற்பாடுகள், இழிவுபடுத்தல்கள், முஸ்லிம்களின் வணிகம் மற்றும் வழிபாட்டு இடங்களின் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.  

போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் உள்ளூர் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் குறித்தும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான எண்ணற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், தாக்குதல்களை அதிகாரிகள் தடுக்க இயலாதுள்ளமை குறித்தும் அமெரிக்கத் தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply