சட்டத்திருத்த மூலங்களில் பதினொன்று அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல

உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 11 திருத்தச் சட்ட மூலங்களும் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத் தில் தெரிவித்தார். இந்த 11 திருத்தச் சட்ட மூலங்களை விவாதிப்பது தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்வதற்கென சபை நடவ டிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

எனினும் 25 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் சபை கூடியது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30  மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கென சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்திருத்த மூலங்களில் 11 சட்டத் திருத்த மூலங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையே சபாநாயகர் இதன் போது சபைக்கு அறிவித்தார்.

11 திருத்தச் சட்ட மூலங்களும் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சபாநாயகர் கூறினார். இதன் போது எழுந்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட திருத்த மூலங்களில் சகல மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்காக அனுப்பப் பட்டுள்ளன.

சில கூற்றுக்கு சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது 11 சட்டத்திருத்த மூலங்கள் அரசிய லமைப்புக்கு முரணா னவையல்லவென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே இவற்றை விவாதத்திற்கு எடுப்பது என்பது தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பு ஒன்றை விடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பில் ஆராய கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது, எழுந்த எதிர்க் கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க, 11 திருத்தச் சட்ட மூலத்தின் வியாக்கி யானத்தின் பிரதியொன்று தமக்கு வேண்டும் எனவும் எந்த நிபந்தனைகளுடன் அவற்றை விவாதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என்பதை நாம பார்க்க வேண்டும் என்றார்.

நேற்றுக்காலை 9.35 மணியளவில் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்ப தாக அறிவித்த சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கான அழைப்பை யும் விடுத்தார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து 25 நிமிடங்களின் பின் மீண்டும் 10 மணிக்கு சபை கூடியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply