பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டமை இலங்கையர்கள் பெற்ற பாக்கியம்!
ஒருபோதும் தோற்கடிக்க முடியாதெனக் கூறப்பட்ட பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டமையானது இலங்கையர்களான நாம் பெற்றுக்கொண்ட ஒருபாக்கியமாகும். ஒரு சிலர் தமது நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்தத் தாய்நாட்டை ஆயுதப் போராட்டத்தின் மூலம் கூறுபோடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் அந்தப் பயங்கரவாதிகளின் ஆயுத பலத்தினைத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தைரியமிக்க தலைமைத்துவத்தினால் முடிந்தது என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்துள்ளார். தேசிய ரணவிரு ஞாபகார்த்த தின ஆசிச் செய் தியிலேயே பிரதமர் இதனை தெரி வித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தாய் நாட்டில் நிரந்தர சுதந்திரத்தினை நிலைபெறச் செய்வதற்காகத் தமது இன்னுயிரை நீத்த வீரமிக்க இராணுவத்தினரையும், பயங்கரவாதத்திலிருந்து தாய்நாடு சுதந்திரம் பெற்றதனை நினைவு கூருமுகமாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள தேசிய ரணவிரு ஞாபகார்த்த வைபவத்தினை முன்னிட்டு ஆசிச் செய்தியினை வெளியிட கிடைத்தமையை நான் பெற்ற பாக்கியமாகக் கருதுகின்றேன்.
யார் எதனைக் கூறினாலும் யுத்தத்தினால் இந்த நாட்டுக்குச் சீரழிவே ஏற்பட்டது. பிள்ளைகளை இழந்த பெற்றார்களும், பெற்றார்களை இழந்த பிள்ளைகளும், அங்கவீனர்களும் இந்தக் குரூர யுத்தத்தின் பிரதிபலன்களாகும். இரத்தம், கண்ணீர், வியர்வையைச் சிந்தி இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக யுத்தத்தினால் எமக்கு வேதனையும் துன்பமும் என்றும் வற்றாத கண்ணீருமே மீதமாகின.
முப்பது வருடங்களாக இடம்பெற்ற மிலேச்சப் பயங்கரவாதமானது எமக்கு நன்மை பயக்கக்கூடிய எதனையும் தர வில்லை. இந்த நாட்டினை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக நாளுக்கு நாள் இந்த நாடு சீரழிவினை நோக்கிச் சென்ற தனையே நாம் கண்டோம். சந்தேகத்துட னும் பயத்துடனும் வாழ்ந்த பொதுமக்கள் ஏனைய இனத்தவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கக்கூடிய நிலைமை இந்த மிலேச்ச பயங்கரவாதத்தினாலேயே ஏற்பட்டது.
பிரிவினைவாத பயங்கரவாதத் துக்கு ஊக்கமளித்துக்கொண்டு இந்த நாட்டினை பிளவுபடுத்துவதற்கு பல்வேறு சக்திகள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முப்படைகளுக்கு மான தலைமைத்துவத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் மாவிலாறு மனிதாபிமான நடவடிக்கையினை ஆர ம்பித்த முப்படையினர் இந்த நாட்டை ஒரு சுதந்திர தேசமாக பரிணமிக்கச் செய்து முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
முப்பது வருட காலமாக தோற்கடிக்க முடியாதென பறைசாற்றிக்கொண்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்தை ஒரு சிறிய காலத்திற்குள் பூண்டோடு ஒழிப்பதற்கு முடியுமாக இருந்ததன் பிரதிபலனாக இந்த நாடு துரித அபிவிருத்தியில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நாட்டுக்குப் பூரண சுதந்திரம் கிடைத்த இந்தச் சிறிய காலத்தினுள் நாம் பெற்றுக்கொண்ட துரித அபிவிருத்தியினை கடந்த காலங்களில் ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியவில்லையென இங்கு பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
மாபெரும் வெற்றியின் பின்னரான அபிவிருத்தியினை நோக்கிய இப்பயணத் தில் நாம் பெற்ற வெற்றியினைக் கொண்டாடும் 2013 தேசிய ரணவிரு ஞாபகார்த்த வைபவம் எல்லா வகையிலும் சிறப்பாக அமையப் பிரார்த்திக்கின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply