பிரபாகரன் தப்பிச் சென்றதாக கூறுவதில் உண்மையில்லை – இராணுவம்

தமிழக பொலிஸார் வழங்கிய கைவிரல் அடையாளம் மற்றும் நந்திக்கடலில் மீட்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைவிரல் அடையாளம் என்பன சமனாவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்,  பிரபாகரன் தப்பிச் சென்று விட்டார் என செய்யப்பட்டு வரும் பிரசாரங்களில் உண்மையில்லை என  சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2009 ஆம் ஏப்ரல் 29 ஆம் திகதி முல்லைத்தீவு கடலுக்கு சென்ற கடற்படையினர் புலிகளின் மூன்று படகுகளை அழித்து விட்டதாகவும் இதனால் எவரும் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்  சேபாலா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களின் மரணத்தை நினைவுக் கூறுமாறு லண்டனில் உள்ள புலம்பெயர் அமைப்பொன்று அங்குள்ள தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply