வடக்கு கிழக்கு மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் – ஜனாதிபதி

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற  வைபவத்தில் அதிதிகளின் வருகைக்கு பின்னர் குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகள் புடைச்சூழ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் பிரதான மேடைக்கு வருதைதந்தனர்.

அவர்களை பிரதமர் தி.மு.ஜயரட்னவும் அவரது பாரியாரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும்; வரவேற்றனர்.

அதன் பின்னர் பாதுகாப்பு படைகளைச்சேர்ந்த 40 வீரங்கணைகள் தேசிய கீதமிசைக்க ஜனாதிபதியினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி படைகளின் அணிவகுப்பை விசேட வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.

அதற்கு பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply