முல்லைத்தீவிற்கு விரைவில் தேர்தல்
நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்னமும் நடத்தப்படாதிருக்கும் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலை உடனடியாக நடாத்த முடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் நேற்று முற்பகல் ஞானம்ஸ் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளன. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் பட்டிருப்பதால் அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப் படவில்லை.
நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக அங்கு தேர்தல்களை நடத்த முடியும். தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீள்குடியேற்றம் பூர்த்திசெய்யப்படாத நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைபற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்விரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
அதேநேரம்- வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவது பற்றி ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜூன் மாதத்தை தேர்தல்கள் தினமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply