இலங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் – கெமரனுக்கு மகஜர்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கோரி, புலிகளின் ஆதரவாளர்களான 7 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிட் கெமரனுக்கு மகஜர்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மகஜர்களுக்கு இதுவரை பிரதமர் பதிலளிக்கவில்லை.
அதேவேளை பிரித்தானிய நாடாளுமன்ற குழுவினர், உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை சந்தித்தி ரகசியமான பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
40 ஆயிரம் தமிழர்கள் பாதுகாப்பு படையினரால் வன்னியில் கொலை செய்யப்பட்டதாக மகஜரில் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply