பொதுநலவாய அமர்வுகளை புறக்கணிப்பதால் நன்மை எதுவுமில்லை!
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்காக அரசாங்கம் சர்வதேச ரீதியான பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளது. அமர்வுகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நோக்கில் வெளிநாட்டு பிரச்சார நிறுவனங்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக்கொள்ள உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க சில சர்வதேச ரீதியான மக்கள் தொடர்பு நிறுவனங்கள் உதவிகள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான ஓர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அமர்வுகளை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஊடக அமைச்சின் செயலாளர் சரிதா ஹேரத், பிரச்சாரக் குழுவிற்கு தலைமை தாங்குவார் எனவும், ஒவ்வொரு நாடுகளினதும் தூதவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தனித்தனியாக பிரச்சாரங்களை முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமர்வுகளை புறக்கணிப்பதனால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply