முஷரப்பிற்கு உரிய தண்டனை வழங்கப்படும் – தலிபான்கள் எச்சரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் இஸ்லாமாபாத் அருகே உள்ள அவரது பண்ணை வீட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கிவரும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் முஷரப்பை விரைவில் கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.

தலிபான்களின் இணையதளமான உமர் மெடியாவில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவில் எஹ்சானுல்லா எஹ்சான் கூறியுள்ளதாவது:-

‘பலூசிஸ்தானில் இருந்து வாரிஸ்தான் வரை இந்த நாட்டை ரத்தக் களறியாகவும், தீக்காடாகவும் ஆக்கியவர் முஷரப்.

சிகப்பு மசூதியில் நூற்றுக்கணக்கான மாணவர்களை கொன்ற கொலைக்காரன் என்ற பழியில் இருந்து அவர் தப்பியோடிவிட முடியாது.

இந்த தீமைகளுக்கு எல்லாம் பதிலடியாக அந்த சாத்தானை கொன்று உரிய தண்டனை வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply