துமிந்தவுக்கு சிங்கபூர் சிகிச்சைக்கான அனுமதி மறுப்பு

ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகரான  பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் விடுக்கப்பட்ட கோரிகை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  சிங்கபூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையையே கொழும்பு மேலதிக நீதவான் பியந்த லியனகே இன்று நிராகரித்துள்ளார்.

வைத்திய பரிசோதனைக்கு வருமாறு துமிந்த சில்வா எம்.பியை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அறிவித்துள்ளமையினால் இரு வாரங்களுக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்கு அவருடைய கடவுச்சீட்டை விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்தார்.

இரண்டு காரணங்களுக்காக அந்த கோரிக்கைக்கு இடமளிக்கமுடியாது என்றும் வைத்திய பரிசோதனைக்கு செல்வதற்காக முறையான வைத்திய சான்றிதழ் முன்வைக்கப்பட்டவில்லை என்றும்  சுட்டிக்காட்டிய மேலதிக நீதவான் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி 50000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 500000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டையும் நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply