வடமாகாணத்தில் 2000 குளங்களை புனரமைக்க திட்டம்
வடமாகாணத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தும் வகையில் இரண்டாயிரம் குளங்களை புனரமைக்கவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். கிழக்கில் திருகோணமலை உட்பட வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங் களையும் உள்ளடக்கியதாக இந்த இரண்டாயிரம் குளங்களைப் புனரமைக் கும் விசே செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பிரதி யமைச்சர் இத்திட்டத்திற்கென விசேட அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மக்க ளின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப் பும் பல்வேறு நடவடிக்கைகளை அர சாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அம்சமாகவே விவசாயத்துறையை மேம்படுத்தும் வகையில் இந்த 2000 குளங்கள் புனரமைக்கும் திட்டம் நடைமுறைப்படு த்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களில் ‘கமநெகும’, ‘திவிநெகும’ போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இத்திட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள 30,000 சிறிய நீர்ப்பாசன குளங்களை புனரமைப்புச் செய்யவுள்ளது. கமநல சேவைகள் தொடர்பான பொறுப்புகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளதால் விவசாய நடவடிக்கைகளுக்கு பயனளிக்கும் வகையில் குளங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குளங்களை ஆழப்படுத்தல் குளங்களின் விஸ்தீரணத்தை விரிவுபடுத்தல் குளங்களுடன் சம்பந்தப்பட்ட வாய்க்கால்களை புனரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளன எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் ஒரு அம்சமாகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் 2000 குளங்களை விரைவில் புனரமைக்கத் தீர்மானித்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply