இலங்கைக்கே முன்னுரிமை: சீனா உறுதி
அபிவிருத்தி நடவடிக் கைகளுக்காக வெளிநாடுகளுக்கு நிதியுதவியை வழங்கும் போது இலங்கைக்கு முன்னுரிமையளிக்கப்படுமென சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹுவாய்பேங் தெரிவித்துள்ளார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண் டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சீன அபிவிருத்தி வங்கியின் தலைவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று பீஜிங் ‘சைனா வேர்ல்ட்’ ஹோட்டலில் நடை பெற்றது.
தமது வங்கியுடன் இலங்கை பேணுகின்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஹுவாய்பேங் அவர்கள் எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பை மேலும் வளர்த்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
28 ஆம் திகதி பீஜிங் நகரின் நகர மண்டபத்தில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றுக்கு தமது வங்கி கூட்டிணைந்திருக்கின்ற தெனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு அதிவேக பாதையை அமைக்கும் கருத்திட்டம் சீன அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பு கிடைக்கின்ற பிரதான கருத்திட்டமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சீன அபிவிருத்தி வங்கி வெளிநாடுகளின் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு கடன் வழங்குகின்ற சீனாவின் மாபெரும் நிதி நிறுவனமாகும். 2013 முதல் காலாண்டு முடிவடைகின்றபோது வங்கியின் சொத்துக்கள் 1.5 டிரிலியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியிருந்தது.
இலங்கை கோரும் அபிவிருத்தி நிதி உதவிகளுக்கு ஆகக் கூடிய கவனம் செலுத்துவதாக திரு. ஹுவாய்பேங் தெரிவித்தார்.
சீன அபிவிருத்தி வங்கி இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு கருத்திட்டங்களுக்கு வழங்குகின்ற ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீன அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். வங்கியின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டப் பணி களைப் பூர்த்தி செய்வதற்கும் மேற்படி வங்கி உதவும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply