அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த 52 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த 52 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீன்பிடி படகில் பயணித்த இவர்களில் 20 சிறுவர்களும் 11 பெண்களும் உள்ளடங்குவர். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply