இலங்கை வீரர்களுக்கு சென்னையில் தொடர்ந்தும் எதிர்ப்பு

சென்னையில் இடம்பெறவிருந்த ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கு பற்றுவதன் காரணமாக அப் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. சென்னையில் வரும் ஜூலை மாதம் ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெறும் என்று ஆசிய தடகள சம்மேளனம் அறிவித்திருந்தது. இப்போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து இலங்கை வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

ஆனால் அவரது கோரிக்கையை தடகள சம்மேளனம் ஏற்கவில்லை.

இதையடுத்து சென்னையில் ஆசிய தடகள போட்டிகளை நடத்த முடியாது என அவர் அறிவித்தார்.

இந்நிலையில் இந்த போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜூலை 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply