ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைப் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் ஐரோப்பிய பாராளுமன்றிற்கு விஜயம் செய்திருந்தது.

இந்தக் குழு பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply