பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டு வீசியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் அறுவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் தடைப்பட்டிருந்த பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சப்ரகமுவ மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டுள்ள பரீட்சை தடையை நீக்குமாறு கோரி கடந்த 28ம் திகதி நான்கு மாணவர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்தனர்.
அதில் இரண்டு மாணவர்கள் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனையடுத்து அங்கு திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை குண்டு பிரயோகித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply