இலங்கை வீரர்களை திருப்பி அனுப்புமாறு ஜெயலலிதா கோரிக்கை
இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிததத்தில், கடந்த மே 27ஆம் திகதி முதல் இரு இலங்கை அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம், வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருவதாகாக தெரிகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் அதனையும் மீறி மத்திய அரசு இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளித்து வருகிறது.
எனவே, இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply